செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்திய முதலமைச்சருக்கு வாழ்த்துகள் என அண்ணாமலை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலை ட்விட்
தமிழ்நாட்டில் 95 ஆண்டு கால செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை அருகே மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது. இதில் 186 நாடுகளை சேர்ந்த 1,800 வீரர் – வீராங்கனைகள் போட்டியிட்டனர். இந்த போட்டி 11 சுற்றுகளாக விறுவிறுப்பாக நடைபெற்ற செஸ் போட்டி நேற்று மாலையுடன் நிறைவுபெற்றது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் – வீராங்கனைகளுக்கு தமிழக முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கினார். இந்நிலையில். செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதற்காக முதலமைச்சருக்கும் தமிழக அமைச்சர்கள், மற்றும் அரசுக்கு வாழ்த்துகள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டிவிட்டரில் பதிவில் பதிவிட்டுள்ளார்.மேலும், வெற்றிபெற்ற செஸ் வீரர்,வீராங்கனைகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations to @CMOTamilnadu & TN government officials for successfully conducting the chess Olympiad 2022.
On behalf of @BJP4TamilNadu, congratulation to Team India for the Historic double bronze. (1/3) pic.twitter.com/DaHV87uu86
— K.Annamalai (@annamalai_k) August 10, 2022

