புதுச்சேரியில் 2022-23 ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையாற்றினார்.
பட்ஜெட் கூட்டத்தொடர்
புதுச்சேரியில் 2022-23ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது, சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் 8 உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது.