தமிழ்நாட்டிற்குள் போதைப்பொருள் நுழைவதை முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தீவிர நடவடிக்கை
இது குறித்து கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ‘தமிழகத்துக்குள் போதைப்பொருள் நுழைவதை முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை அரசுக்கு இருக்கிறது. இதுகுறித்த ஆபத்தின் நிலை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து வேண்டும். வீட்டில் பெற்றோர்களும் பள்ளியில் ஆசிரியர்களும் போதைப்பொருள் தீமைகள் குறித்து குழந்தைகளுக்கு கற்பிக்கவேண்டும். கல்லூரி நிர்வாகத்திற்கும் உண்டு. இது போன்ற போதைப்பொருளை பொது மக்கள் அனைவரும் சேர்ந்துதான் ஒழிக்கவேண்டும். வியாபாரிகள் சமூகத்தின் பொறுப்புணர்ந்து போதைப் பொருள் இனி விற்க மாட்டேன் என உறுதி ஏற்க வேண்டும். போதைப் பொருள் விற்பவர்களை கைது செய்து அவர்களின் அசையும் அசைய சொத்துக்களை முடக்க வேண்டும். போதைப் பொருளே சாதி, மத மோதல்களுக்கு தூண்டுதலாக அமைந்து விடுகிறது என கூறியுள்ளார்.

