அரசியல்தமிழ்நாடு

அதிமுக எந்த காலத்திலும் வீழ்ந்ததாக சரித்திரம் கிடையாது – இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் !

அதிமுக எந்த காலத்திலும் வீழ்ந்ததாக சரித்திரம் கிடையாது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்து வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக என்ற கட்சி பல பிரிவுகளாக பிரிந்து பலம் இழந்து காணப்படுகிறது. ஒற்றை தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இருவரும் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வந்தனர். தற்போது அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டி உள்ளது.

aiadmk party

துணை ஒருங்கிணைப்பாளர் கே. பி. முனுசாமி

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடந்தே தீரும் என இபிஎஸ் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என ஓபிஎஸ் இபிஎஸ்க்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், திட்டமிட்டபடி வரும் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நிச்சயம் கலந்துகொள்வார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.

தீர்மான கூட்டம்

ஆனால் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம் குறித்து கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெறும். இந்த கூட்டத்தில் இபிஎஸ் பொதுசெயலாளராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.

kootam

ஐடி விங்க் நிர்வாகி

இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஐடி விங்க் நிர்வாகிகளுடன் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ‘அதிமுக பலம் பொருந்திய கட்சி. அதிமுக எந்த ஒரு காலத்திலும் வீழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. அதிமுகவை அழிக்க யார் நினைத்தாலும் நான் முன்னின்று காப்பேன்’ என்றார்.

மேலும், ‘கழகத்தை பலவீனப்படுத்த ஒரு சிலர் முயற்சி செய்கிறார்கள் அதனை முறியடித்து உங்களுடைய துணைக்கொண்டு அதிமுக எதிர்காலத்தில் பலம் பொருந்திய கட்சியாக மாற்றிக்காட்டுவோம். அதற்கு உங்களுடைய ஐடி விங்க் பங்கு மிக முக்கியம். அதை முறையாக செய்ய வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்’ என அந்த வீடியோவில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

Related posts