இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவித்துள்ளது.
ஜெய்பீம் சர்ச்சை
ஞானவேல் இயக்கத்தில், சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான படம் ஜெய்பீம். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாய மக்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக ஸ்ரீருத்ர வன்னியர் சேவா அமைப்பு சார்பில் சந்தோஷ் என்பவர், நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் த.செ.ஞானவேல் ஆகியோர் மீது வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்கு ரத்து
இதனைத்தொடர்ந்து இது தொடர்பான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று நடிகர் சூர்யா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதிஷ்குமார், ஜெய்பீம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு விட்டதால் குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுப்படுத்தும் காட்சிகள் படத்தில் இருக்கிறது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று கூறி நடிகர் சூர்யா மீதான வழக்கையும், விசாரணையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

