செஸ் போட்டி
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரியில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள் இதனால் தமிழக அரசின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதற்காக பூஞ்சேரியில் 22 ஆயிரம் சதுர அடியில் அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
#ChessOlympiad2022 An indoor game I love the most … wishing all the chess minds the very best .. god bless. pic.twitter.com/nVZ8SU51va
— Rajinikanth (@rajinikanth) July 28, 2022

