நாளை தொடங்கும் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்குகிறது. இதனை இந்திய பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதனையொட்டி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விதிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளது. 5 பேர் கொண்ட ஒவ்வொரு அணிகளும் 11 சுற்றுகள் விளையாட வேண்டும். இதில் ஒரு சுற்றின் இறுதியில் அதிக புள்ளிகள் பெரும் அணிகளுடன் அடுத்தடுத்த சுற்றுகளில் மோதும். 5 பேர் கொண்ட அணியில் விளையாடுவோரின் வரிசையை முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும். போட்டியின் இடையில் வரிசையை மாற்ற முடியாது.
ஒவ்வொரு சுற்றும் ஒன்றரை மணி நேரம் நடைபெறும். இறுதி சுற்றின் முடிவில் அதிக புள்ளி சேர்க்கும் அணிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும். ஒரே புள்ளியில் இரண்டு அணிகள் இருக்கும் பட்சத்தில் அந்த அணிகளின் அதிக வெற்றியை கணக்கில் கொண்டு வெற்றி தீர்மானிக்கப்படும்.

