தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை எதிர்த்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார்.
மின் கட்டண உயர்வு
தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக தான் மின் கட்டணத்தை உயர்த்துவதாக கூறப்பட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியது.
ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசின் மின் கட்டண உயர்வுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதன்தொடர்ச்சியாக வரும் 27ம் தேதி திமுக அரசின் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக அமைப்பு ரீதியாக மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்.

