நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை தனது விசாரணையை நிறைவு செய்துள்ளது.
அமலாக்கத்துறை விசரணை
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை தொடர் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் 2 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை ராகுல் காந்தி நிர்வாக இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்டது. மேலும், விசாரணையின் போது அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

ராகுல் காந்தி கோரிக்கை
நான்காவது நாள் விசாரணையின் போது சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அவரை கவனித்து கொள்ள விசாரணையில் இருந்து விலக்கு அளிக்குமாறு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற அமலாக்கத்துறை கடந்த திங்கள் கிழமை விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டிருந்தது.
5 நாட்கள் விசாரணை
இதன்படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் கடந்த 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை 27 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. 5வது நாளாக நேற்று காலை 11.15 மணிக்கு அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராகுல் காந்தியிடம் விசாரணை தொடங்கப்பட்டது. தொடர்ந்து இரவு 8 மணி வரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு அரை மணிநேரம் ஓய்விற்கு பிறகு நள்ளிரவு வரை விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு
நேற்று நள்ளிரவோடு விசாரணையை நிறைவுசெய்த அமலாக்கத் துறையினர், மீண்டும் சம்மன் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் ராகுல் காந்தி மீதான விசாரணை நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 50 நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் பல்வேறு கேள்விகளை அமலாக்கத் துறை சார்பில் கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சோனியா காந்தி
இந்நிலையில், இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நாளை ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருக்கும் அவர் ஆஜராவாரா அல்லது அவகாசம் கோருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

