முதல்வர் ஸ்டாலினுக்கு மேலும் சில நாட்கள் ஓய்வு தேவை என்று சென்னை காவேரி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை அறிக்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதனையடுத்து நேற்று சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து நேற்று மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், ‘கொரோனா தொற்று காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை காவேரி மருத்துவமனை மு.க.ஸ்டாலின் உடல் நிலை தொடர்பாக இன்று மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு மேலும் சில நாள்கள் ஓய்வு தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

