தமிழ்நாடு

திருச்செந்தூரில் அரசு பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை – வட்டார வளர்ச்சி அலுவலர் பதவியிறக்கம் !

திருச்செந்தூரில் ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி துறையில் அரசு பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரை பதவியிறக்கம் செய்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அதிரடியாக
உத்தரவிட்டுள்ளார்.

விளாத்திகுளம்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன். அவர் திருச்செந்தூர் ஒன்றியத்தில் பணிபுரிந்த போது தனது கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரிந்த பெண் ஊழியருக்கு ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டு உறுதியானதை தொடர்ந்து அவர் வகித்துவரும் பதிவியில் இருந்து இரு நிலை கீழ் இறக்கம் செய்யப்பட்டு இளநிலை உதவியாளராக பதவியிறக்கம் செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் ஊழியருக்கு பாராட்டு

பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் தனக்கு நேரிட்ட பாலியல் துன்புறுத்தலை துணிச்சலுடன் புகார் செய்ததை மாவட்ட ஆட்சியாளர் பாராட்டினார். இதே போன்று பாலியல் துன்புறுத்தளுக்கு ஆளாகும் பெண்கள் தைரியமாக அதை எதிர்த்து நிற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம்

மேலும் பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு ) 2013 பிரிவு 13 மற்றும் 15(அ) இன் படி குற்றம் புரிந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து ரூ 10,000/- ஒரு தவணையாக பிடித்தம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்க படவேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்  உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவருவது பெண்களிடம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு உடனடியாக பெண்கள் மீதாக நடக்கும் பாலியல் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து கூறிவருகின்றனர்.

Related posts