தமிழகத்தின் 11 நல திட்டங்களுக்கு 31 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வந்த பாரத பிரதமர் முன்னிலையில், ஒரு தமிழக முதல்வர் எப்படி நடந்துகொள்ள கூடாது என்பதற்கு ஸ்டாலின் ஒரு சான்று என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாட்டியுள்ளார்.
மோடி வருகை
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு நேற்று முதல்முறையாக தமிழகம் வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. பல்வேறு நலத்திட்டங்களை தமிழகத்தில் தொடங்கி வைக்க நேற்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டார்.
கருத்து மோதல்
திமுகவினருக்கு பாஜகவினரும் ஒருவருக்கொருவர் தொடர்ந்து கடுமையாக விமர்சனை செய்து வரும் நிலையில் நேற்று மோடியும், ஸ்டாலினும் ஒரே மேடையில் அமர்ந்தது மக்களிடையே கவனம் பெற்றது. அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் முதலில் பேசிய எல்.முருகன் நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு நன்றி கூறினார். அதன்பிறகு முதன்மை உரையாற்றியனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அண்ணாமலை குற்றச்சாட்டு
நிகழ்ச்சி முடிந்த பிறகு சென்னை விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடியை டெல்லிக்கு வழியனுப்பி வைத்தார் பாஜக தலைவர் அண்ணாமலை . பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ‘பல முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல், பல திட்டங்கள் அர்ப்பணிப்பு இன்று செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்ட தமிழகத்தை உருவாக்குவதற்காக பிரதமர் மோடி வந்துள்ளார்.
கண்டனம்
இன்று தமிழக முதல்வர் நடந்து கொண்ட விதம். பிரதமரை மேடையில் அமரவைத்துவிட்டு தனது அரசியல் நாடகத்தை நடத்துகிறார் ஸ்டாலின். கச்சத்தீவு பற்றி பேசுகிறார், 1974ல் கருணாநிதி தான் இலங்கைக்கு இந்த தீவை பரிசாக வழங்கினார் என்பதை முதலமைச்சர் மறந்து விட்டாரா அல்லது சரித்திரத்தை மறைக்கிறாரா? மேலும், கச்சத்தீவை மீட்க எங்களுக்கு தெரியும் அரசு எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.
அண்ணாமலை கேள்வி
தமிழகம் மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டிய 25 ஆயிரம் கோடி பணத்தை பாஜகவினரோ அல்லது பாரத பிரதமரோ இதுவரை கேட்டிருக்கிறார்களா? எங்கே நிதியமைச்சரை மறுக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம். இதனை மேடையில் முதலமைச்சர் சொல்லியிருக்கலாமே நாளை டெல்லிக்கு வந்து பணத்தை தருகிறேன் என்று’ இவ்வாறு அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
மேலும், முதல்வர் ஸ்டாலின் செய்தது சரித்திர பிழை என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.