கபடி போட்டியில் விளையாடிக் கொண்டியிருக்கும் போதே உயிரிழந்த வீரர் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உயிரிழந்த வீரர்
கடலூர் மாவட்டம் வல்லம் அடுத்த மதுரா மானடிகுப்பம் கிராமத்தில் உள்ள புளியந்தோப்பு மைதானத்தில் கடந்த ஜூலை 24ம் தேதி மாவட்ட அளவில் கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்ற புறங்கனி கிராமத்தைச் சேர்ந்த விமல்ராஜ் (21) என்ற இளைஞர் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கும் மற்றும் சகோதரிக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், உயிரிழந்த விமல்ராஜ்யின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

