செஸ் போட்டியில் வெற்றிப்பெற்ற 100 மாணவர்களை தேர்ந்தெடுத்து விமானத்தில் அழைத்து சென்ற உதயநிதி ஸ்டாலின்.
செஸ் போட்டி
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மாமல்லபுரத்தில் தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்தப்பட்டது. அந்த போட்டிகளில் வெற்றிப்பெற்ற 100 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை, தமிழக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் விமானம் மூலம் பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அதே விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். மேலும், அந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.
#ChessOlympiad2022 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்ற அரசு பள்ளி மாணவர்கள் சென்னை-பெங்களூரு விமானத்தில் பறந்துகொண்டே செஸ் விளையாடும் சிறப்பு விமான பயணத்தை இன்று தொடங்கி வைத்தோம். @TThenarasu @thamoanbarasan @Anbil_Mahesh @SMeyyanathan pic.twitter.com/F6rHF8VcL3
— Udhay (@Udhaystalin) July 27, 2022

