அறிவியல்மருத்துவம்

இந்தியாவில் 26 கோடி பேர் புகையிலை உட்கொள்வர்; இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம் !

1987 ஆம் ஆண்டு உலக சுகாதர நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து அறிவிக்கப்பட்டதின்படி ஒவ்வொரு ஆண்டும் மே 31 ஆம் தேதி உலக புகையிலை ஒழிப்பு நாளாக அனுசரிக்கப்பட்டடு வருகிறது.

26 கோடி பேர்

புகையிலையால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக உலக சுகாதார நிறுவன உறுப்பு நாடுகள் இந்த நாளை அறிவித்தன.உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி இந்தியாவில் சுமார் 26 கோடி பேர் புகையிலை பழக்கம் உடையவர்களாக உள்ளனர்.

cigqarete

பல ரூபத்தில்  உட்கொள்ளப்படுகிறது

இதுகுறித்து பேசிய மதுரையை சேர்ந்த மருத்துவர் ஜெ.கண்ணபெருமான் கூறியதாவது, ‘இன்று உலகில் மிக நெருக்கடியானவற்றில் ஒன்று புகையிலையும் அதனை சார்ந்த பொருட்களும் தான். இந்தியாவில் 26 கோடி பேர் புகையிலை பழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர் என உலக சுகாதாரம் அறிவித்துள்ளது. சிகரெட் புகைப்பது மட்டுமின்றி புகையிலை மெல்லுவது, குட்கா, பான் உட்கொள்வது என பல ரூபத்தில் புகையிலை உட்கொள்ளப்படுகிறது.

புகையிலை எதிர்ப்பு தினத்தின் நோக்கம்

வேகமாக வளர்ந்து வரும் இப்பழக்கத்திலிருந்து பொதுமக்களை காக்க தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதே இந்த புகையிலை எதிர்ப்பு தினத்தின் நோக்கம். புகையிலை உட்கொள்ளும்போது வாய், நுரையீரல், சுவாசக்குழாய், இருதயம், கல்லீரல், குடல், ரத்தக்குழாய், நரம்பு மண்டலம் என உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும். புகையிலை பழக்கத்தை விடுவது எந்த வயதிலும் சாத்தியமாகும். புகை பிடிப்பதை நிறுத்தியதில் இருந்து 24 மணி நேரத்தில் உடலில் நிகோடின் என்ற ரசாயனம் குறையத் தொடங்கும்.

lungs

விலை மதிப்பில்லாத புதையல்

புகையிலையை தவிர்ப்பதால் ஒரே ஆண்டில் சுவாசமண்டலம் சீராகும். இரண்டு முதல் 3 ஆண்டுகளில் இருதய பாதிப்பு குறையும். ஆண்டுகள் செல்ல செல்ல புற்றுநோய் அபாயமும் குறையும்.  மேலும், சிகரெட் புகைப்பவரை மட்டுமின்றி அருகில் உள்ளவர்களையும் இந்த புகை பாதிக்கும். மன உறுதியும், உடல் ஆரோக்கியம் மீது அக்கறையும் இருந்தால் புகையிலையை முற்றிலுமாக ஒழிக்கலாம். நமக்கும், நம் குடும்பத்திற்கும் ஆரோக்கியம் என்ற விலை மதிப்பில்லாத புதையல் கிடைக்கும்’ என மருத்துவர் கூறினார்.

family

விழிப்புணர்வு பேரணி

மேலும், புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணியை மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கல்லூரி மாணவ மாணவியர் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் துவக்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணியை தொடர்ந்து உறுதி மொழி ஏற்பும் நடைபெற்றது. இந்த பேரணியில் மாணவ, மாணவியர் மட்டுமின்றி போலீஸ் கண்காணிப்பாளர் மற்றும் சுகாதார துறை உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மட்டுமின்றி, உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related posts