கன்னியாகுமரியை சேர்ந்த மருத்துவர் தனது உறவினர் அழைப்பதற்காக விமான நிலையம் சென்ற அவருக்கு 10 கோடி பரிசு கிடைத்துள்ளது.
கேரள லாட்டரி சீட்
தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் அரசே அதிகாரப்பூர்வமாக தனது கட்டுப்பாட்டின் கீழ் நடத்தி வருகிறது. ஒவ்வொரு பண்டிகையின்போது மெகா பம்பர் குலுக்கல் சீட்டு விற்பனை நடத்துவது வழக்கம். இதில் பம்பர் குலுக்கல் முறையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு விசு பம்பர் லாட்டரி வாங்கியுள்ளார். விசு என்பது ஆண்டு பிறப்பை குறிக்கும் சொல் . விசு லாட்டரி பெயரில் அரசால் சுமார் 10 கோடி மதிப்புள்ள சுமார் 43 லட்சம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
10 கோடி பரிசு
முதல் பரிசாக 10 கோடி ரூபாய் எச்பி 727990 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 22 தேதி வெளியானது. ஆனால் 10 கோடி ரூபாய் வென்ற லாட்டரி சீட்டின் எண் அறிவிக்கப்பட்டு யாருமே கேரள அரசை நாடவில்லை.
திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு அருகே சில்லரை விற்பனை செய்யும் வல்லக்கடவை சேர்ந்த ரங்கன் என்பவரின் கடையில் தான் அந்த லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் லாட்டரி சீட்டை வாங்கியவர் வெளியூர் அல்லது வெளிநாட்டை சேர்ந்தவரா என்ற கோணத்தில் விசாரித்து தேடி வந்தது. 10 கோடி பரிசு வென்றவர் யார் ? அவர் எந்த ஊரை சேர்ந்தவர் ? என கேரள அரசு தீவிரமாக தேடியது.
விசு லாட்டரி
விசு பம்பர் லாட்டரி சீட்டு விற்பனைக்கான மொத்த பரிசுத்தொகை ரூபாய் 34 கோடி ஆகும். லாட்டரி சீட்டிற்கான மொத விற்பனை தொகை சுமார் 250 கோடி ரூபாய் நடைபெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியில் உள்ள மண்வளக்குறிச்சியை சேர்ந்த மருத்துவர் பிரதீப் குமார் மற்றும் அவர் உறவினர் ரமேஷ். மருத்துவர் மற்றும் அவர் உறவினர் தான் திருவனந்தபுரத்தில் லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்கள் என தெரியவந்தது.
இவர்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உறவினர் ஒருவரை அழைத்து வர சென்ற போது வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு கிடைத்தது. தங்களுக்குரிய எண்ணுக்கு தான் பரிசு கிடைத்துள்ளது என அறிந்து திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி துறையில் அலுவலகத்திற்கு சென்று விவரத்தை தெரிவித்துள்ளனர். விரைவில் அவர்களுக்குரிய பரிசு தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறைவனுக்கு நன்றி
தனக்கு பரிசு கிடைத்தது குறித்து டாக்டர் பிரதீப் குமார் கூறுகையில் குலுக்கல் நடைபெற்று மூன்று நாட்களுக்கு பின்னரே தாங்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு விழுந்தது தெரியவந்தது. அதன் பின்னர் தங்கள் ஊரில் நடைபெற்ற திருவிழா மற்றும் உறவினர் ஒருவரின் மரணம் என பல வேலைகளுக்கு பின்பு இன்று கேரள அரசு லாட்டரி அலுவலகத்தில் சென்று லாட்டரி சீட்டை சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். தங்களுக்கு இந்த பரிசு கிடைத்தமைக்காக இறைவனுக்கு நன்றி கூறினார்.
வழக்கமாக லாட்டரி வாங்கும் பழக்கம் இல்லாத இவர் எதேர்ச்சையாக வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 10 கோடி முதல் பரிசு பெற்ற சம்பவம் கன்னியாகுமரி மற்றும் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.