கோவிட் பரவுவதை தடுக்க பொது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.இந்தியாவில் கோவிட் பாதிப்புகள் குறைந்து வந்ததால், அதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முற்றிலுமாக அகற்றப்பட்டன. ஆனால், தற்போது மீண்டும் கோவிட் தொற்று வேகமாக பரவி வருகிறது. முக்கியமாக இந்தியாவில் தலைதூக்க தொடங்கியுள்ளதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 30 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சரான மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம், கோவிட் பரவலை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிவது அவசியமாகும். தமிழகத்தில் முகக்கவசம் அணிவதற்கு விலக்கு அளிக்கப்படவில்லை.
அதேபோல், தனிமனித இடைவெளிக்கும் விலக்கு அளிக்கப்படவில்லை. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். டில்லி, உத்தரபிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கோவிட் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாதிப்பு அதிகரிக்கும் மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முகக்கவசம் அணிவதற்கு எந்த சூழலிலும் விலக்கு அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.