அரசியல்தமிழ்நாடு

கருப்பு கொடி என்ற பெயரில் கலவரத்திற்கு திட்டமிடுவது திமுகவின் வாடிக்கை – அண்ணாமலை பேச்சு!

கருப்பு கொடி என்ற பெயரில் கலவரத்திற்கு திட்டமிடுவது, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு(திமுக) வாடிக்கையான செயல் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தில் நேற்று நடைபெற்ற விழாவிற்கு ஆளுநர் ரவி சென்றிருந்தார். ஆளுநர் ரவியை வரவேற்க கூடாதென்று என்று திமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் கோரிக்கை வைத்தனர். மேலும் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் வாகனத்தின் மீது கற்கள் மற்றும் கருப்பு கொடிகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கருப்பு கொடி என்ற பெயரில் கலவரத்திற்கு திட்டமிடுவது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாடிக்கையானது என்றும், கற்கள் மற்றும் கொடிக்கம்புகளை வீசுவது திமுகாவிற்கு கை வந்தக்கலை என்றும் விமர்சனம் செய்துள்ளார். ஆளுநருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு போன்றவை, திமுக ஆட்சியில் தமிழகம் எவ்வாறு சீர்கேடு அடைந்துள்ளது என்பதற்கு சான்று. தமிழ் நாட்டில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத போது பெண்கள், குழந்தைகள் மற்றும் சாமானிய மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு கிடைக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து ஆளுநர் மீது ஆளும் கட்சி
காட்டும் வெறுப்புதான் தாக்குதலுக்கு காரணமான இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts