திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 32ஆவது மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரிய குப்பம், ரயில் நிலையம், ஜே.என்.சாலை, உழவர் சந்தை, பஜார் வீதி உள்ளிட்ட 12 பகுதிகளில் 32ஆவது மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதனை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜவஹர்லால், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் தேவி ஸ்ரீ, மாவட்ட வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

