ஆன்மீகம்

பகீரதனின் தவமும் கங்கைகொண்ட ஈசனும் !

இன்று போல பழங்காலத்தில் கங்கை பூமியில் ஓடுவது கிடையாது. ஆகாயத்தில் மட்டுமே ஓடியது. அதனாலேயே ஆகாய கங்கை என்று பெயர் பெற்றது. அந்த சமயத்தில் பகீரதன் என்ற அரசன் தன் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய என்ன செய்ய வேண்டும் என்று முனிவர்களிடம் கேட்டான்.

அதற்கு அவர்கள், உன் முன்னோர்களின் அஸ்தியை கங்கையில் கரைத்தால் அவர்களின் ஆத்மா சாந்தியடையும் என்று கூறினார்.

இதனால் கங்கா தேவியை நோக்கி பகீரதன் கடும் தவம் புரிந்தான். பகீரதனின் தவத்தை மெச்சிய கங்கை அவன் முன் காட்சி அளித்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டாள்.

அவனோ, தாங்கள் பூமியில் ஓடவேண்டும் தாயே அப்போது தான் என் முன்னோர்களின் அஸ்தியை நான் கரைத்து அவர்களின் ஆத்மாவை சாந்தியடைய செய்ய முடியும் என்று கூறினான்.

பகீரதன் கேட்ட வரத்தை கங்கா தேவி ஒரு நிபந்தனையோடு அளித்தாள். நான் பூமியில் ஓட தயார் ஆனால் நான் போமியில் ஓடினால் என் வேகம் தாங்காமல் இந்த பூமி வெடித்து சிதறிவிடும்.

 

ஆகையால் என் வலிமையை தாங்கக்கூடிய ஒருவர் என்னை தன் தலையில் வைத்து தாக்கினால் நான் பூமிக்கு வருகிறேன். என்னை தாங்கும் சக்தி சிவபெருமானுக்கே இருக்கிறது. ஆகையால் அவரை நோக்கி நீ தவம் புரி என்றாள்.

கங்கா தேவி கூறியது படி பகீரதன் சிவனை நோக்கி தவம் செய்தான். சிவனும் பகீரதன் முன் தோன்றி அவன் வேண்டிய வரத்தை அளித்தார். அதன் படி தன் ஜடாமுடியை விரித்து அதில் கங்கையை இறங்க சொன்னார்.

 

சிவனின் ஜடாமுடியில் இறங்கி பின் பூமியை அடைந்த போது கங்கையின் வேகம் குறைந்தது. இதனாலேயே கங்கையை சிவன் தன் தலையில் வைத்திருக்கிறார்.

Related posts