சினிமாவெள்ளித்திரை

400 திரையரங்குகளில் வெளியாகும் விஜய் சேதுபதியின் படம் !

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வரும் 24ம் தேதி வெளியாகவிருக்கும் படம் மாமனிதன். இத்திரைப்படத்தை சுமார் 400 திரையரங்குகளில் வெளியாகப் போகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாமனிதன் படம்

‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘தர்மதுரை’ ஆகியப் படங்களுக்கு பிறகு, சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி 4வது முறையாக இணைந்திருக்கும் படம் ‘மாமனிதன்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். குரு சோமசுந்தரம், சாஜி சென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

மாமனிதன் திரைப்படம்

ஆர்.கே.சுரேஷ்

‘மாமனிதன்’ படத்திற்காக முதல்முறையாக இசைஞானி இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து பணியாற்றியுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டே இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்துவிட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணங்களால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. ‘தர்மதுரை’ படத்தை தயாரித்த ஆர்.கே.சுரேஷ், ‘மாமனிதன்’ படத்தின் வெளியிடும் உரிமையை பெற்றார்.

வெளியீடு தேதி

இதனையடுத்து. இந்தப் படம் முதலில் மே 6ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் விஜயசேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியானது. இதனால் படத்தின் வசூல் பாதிக்கும் என்பதால் படக்குழு மீண்டும் வெளியீடு தேதியை தள்ளி வைத்தது. அதனைத்தொடர்ந்து டான், நெஞ்சுக்கு நீதி ஆகிய திரைப்படங்கள் வெளியானது. இதனால் மாமனிதன் படத்தின் வெளியீட்டை ஜூன் மாதத்திற்கு ஆர்.கே சுரேஷ் ஒத்திவைத்தார்.

படக்குழு

400 திரையரங்குகள்

இந்நிலையில், மாமனிதன் திரைப்படம் வரும் 24ம் தமிழகத்தில் வெளியாகிறது. அதன்படி தற்போது மாமனிதன் படத்தை சுமார் 400 திரையரங்குகளில் வெளியிடுவதற்கான வேலைகளில் ஆர்.கே. சுரேஷ் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி, சீனுராமசாமி, ஆர்.கே. சுரேஷ் கூட்டணியில் வெளியான தர்மதுரை திரைப்படம் வெற்றியடைந்தது. இதனால் இந்த கூட்டணியில் வெளியாகவிருக்கும் மாமனிதன் திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related posts