கொரோனா தொற்று காரணமாக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடக்கவிருக்கும் 5வது டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று
ரவிச்சந்திரன் அஸ்வின் கொரோனா தொற்று காரணமாக இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே ஜூலை 1ம் தேதி நடக்கவிருக்கும் 5வது டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை என பிசிசிஐ திங்கள் கிழமை அன்று பிடிஐக்கு தெரிவித்துள்ளது.
ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின் இவர் தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர். வலதுகை கிரிக்கெட்டரும், வலதுகை சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் விளையாடினார். ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் தமிழ்நாடு அணிக்காக விளையாடினார்.
மேலும், இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 15 வருடங்களாக விளையாடி வருகிறார். 2011ம் ஆண்டு இந்தியா அணி உலக கோப்பையை வென்றது. அதில் அஸ்வினுக்கு முக்கிய பங்குண்டு. இவர் விளையாட்டு துறையில் உயரிய விருதான அர்ஜுனன் விருதை பெற்றுள்ளார்.
கோவிட் பாசிட்டிவ்
தற்போது அஸ்வின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அஸ்வின் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளார். இவர் அனைத்து விதமான கொரோனா விதிமுறைகளை கடைபிடித்த பின்னரே இந்தியா அணியுடன் இணைவார் என பிடிஐ தெரிவித்துள்ளது. இந்திய அணி ஏற்கனவே கடந்த 16ம் தேதி அன்றே இங்கிலாந்து சென்றுவிட்டது. ரவிச்சந்திரன் அஸ்வின் புறப்படுவதற்கு முன்னரே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பிசிசிஐ
ஆனால், ‘ஜூலை 1ம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு அவர் சரியான நேரத்தில் குணமடைந்து விட்டால் ஜூலை 1ம் தேதி நடக்கும் போட்டியில் பங்குபெருவார் என பிசிசிஐ கூறியுள்ளது. அவர் குணமடைவர் என நாங்கள் நம்புகிறோம் என்று பிசிசிஐ தரப்பில் கூற விரும்புவதாக பிடிஐ செய்தி தெரிவித்துள்ளார். இதனால் பயிற்சி ஆட்டத்தில் அஸ்வின் ஆடமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.