அரசியல்சமூகம்தமிழ்நாடு

10 கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும் – முதலமைச்சர் உத்தரவு !

தொகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத 10 கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில், ‘தொகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத 10 கோரிக்கைகளை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அடுத்த 15 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்களின் ஒப்புதலை பெற்ற பின்பு நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

அத்தியாவசிய திட்டங்களை அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். ‘உங்கள் மாவட்டத்தில் உங்கள் முதல்வர்’ என்ற திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தொகுதியிலும் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறித்து எம்.எல்.ஏ.க்களின் பரிந்துரைகளை பெற்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து அவற்றை பரிசீலித்து ஒப்புதல்கள் வழங்கப்பட உள்ளது. பட்டியலில் இருக்கும் மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts