சினிமாவெள்ளித்திரை

இந்தியன் 2 படத்தை விரைவில் தொடங்க இருக்கிறோம் – உதயநிதி ஸ்டாலின்!

இந்தியன் 2 படத்தை மீண்டும் தொடங்க போவதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ரெட் ஜெயிண்ட் மூவிஸ்

தற்போது பல படங்களின் தமிழக வெளியீட்டு உரிமையை தனது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தின் கீழ் பெற்று வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அதன்பெயரில் சிவகார்த்திகேயன் நடிப்பில், லைக்கா நிறுவனம் தயாரித்த படம் டான். இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. படம் திரைக்கு வருவதற்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய உதயநிதி டான் படம், சிவகார்த்திகேயனின் முந்தைய படமான டாக்டர் படத்தை விட அதிக வசூல் செய்யும் என்று கூறியிருந்தார்.

Don Success Meet

டான் வசூல்

இதனிடையே டான் படம் கடந்த மாதம் திரைக்கு வந்து மிக பெரிய வெற்றி பெற்றது. படம் இதுவரை 125 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டாக்டர் படம் 100 கோடி ருபாய் வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது.

செய்தியாளர் சந்திப்பு

இதனையடுத்து டான் படத்தின் வெற்றிக்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், சூரி, எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் சிபி, சக்கரவர்த்தி, அனிருத், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

Don Casting

அனிருத் பேச்சு

நிகழ்ச்சியில் பேசிய அனிருத், தங்கள் கூட்டணியில் வெளியான எதிர்நீச்சல் 25 கோடி ரூபாய் வசூல் செய்தது. தற்போது 10 ஆண்டுகள் பிறகு டான் திரைப்படம் 125 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்று கூறி மகிழ்ந்தார். அடுத்து 200 கோடி ரூபாய் வசூல் செய்ய அதிக காலம் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று சிவகார்த்திகேயனிடம் கூறினார்.

உதயநிதி பேச்சு

அதற்கு பிறகு பேசிய உதயநிதி, படம் தற்போது வெற்றியடைந்து விட்டதால் சில உண்மைகளை கூறப்போவதாக கூறினார். ‘என்னை தான் முதலில் படம் பார்க்க சொன்னார்கள். நானும் படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டு, என்னுடன் இருந்தவர்களிடம் இதற்கு சிரிப்பு வருகிறதா என்று கேட்டேன். அதன்பிறகு இரண்டாம் பாதியில் இறுதி ஒரு மணி நேரத்தில் இருந்த செண்டிமெண்ட் காட்சிகளை பார்த்துவிட்டு படம் நிச்சயம் வெற்றி என்று கூறினேன்.

udhayanidhi stalin and sivakarthikeyan

நான் நடிக்க வேண்டிய படம்

இரண்டாவது உண்மை, இந்தப் படம் முதலில் எனக்குதான் வந்தது. ஆனால் பள்ளி மாணவனாக நான் நடித்தால் நன்றாக இருக்காது என்று மறுத்து விட்டேன். இந்த உண்மை சிவகார்த்திகேயனுக்கும் தெரியாது முதன்முதலில் இதை இங்கேதான் சொல்கிறேன்’ என்று உதயநிதி கூறினார். மேலும், அடுத்து லைக்கா நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியன் 2 படத்தை விரைவில் ஆரம்பிக்க போவதாக தெரிவித்தார்.

இந்தியன் 2 அறிவிப்பு

கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து வசூல் சாதனை படைத்து வரும் படம் விக்ரம். இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் தான் வெளியீட்டு இருந்தார். அதன்பிறகு கமல் இந்தியன் 2 படத்தில் மீண்டும் நடிப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்தியன் 2 படத்தை தொடங்க போவதாக அறிவித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

Related posts