சினிமா

இந்த வருட தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் – விஜய் 66 அப்டேட்ஸ்!

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் இளைய தளபதி விஜயின் அடுத்த படம் குறித்த செய்திகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அப்படத்திற்கு தற்காலிகமாக விஜய் 66 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டைவேடத்தில் நடித்து மாபெரும் வெற்றிபெற்றப் படம் கத்தி. விஜய் 66 படத்திலும் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்களே இப்படத்தின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு காரணமாக உள்ளது.

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி விஜய் 66 படத்தை இயக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் படம் உருவாகவுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் படப்பிடிப்பிற்கான வேலைகள் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றன சினிமா வட்டாரங்கள்.

எமோஷனல் பொழுதுப்போக்கை மையமாக வைத்து கதைக்களம் அமைந்துள்ளதால் ஸ்ராங்கான வில்லன் தேவை என்பதால் இந்தி மொழியில் புகழ்பெற்ற நடிகர் விவேக் ஓபுராய் வில்லனாக நடிக்கவுள்ளார் என இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாகவும், தமன் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. திட்டமிட்டப்படி படப்பிடிப்பு முடிவடைந்தால் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.  விஜய் 66 தீபாவளி அன்று வெளியானால் அது அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Related posts