நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு பாரதிய ஜனதா கட்சியினை எதிர்க்க வேண்டுமென தெரிவித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன்.
சமீபத்தில் நடந்து முடிந்த உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பஞ்சாப் தவிர்த்து பிற நான்கு மாநிலங்களிலும் அறுதிப்பெரும்பான்மை பெற்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.
பாஜகவின் இந்த தொடர்ச்சியான தேர்தல் வெற்றிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள திருமா, எதிர்வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டுமேயானால், நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். காங்கிரசு, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிரான மாற்று சக்தியாக ஒரே அணியில் திரள வேண்டும் என்பதையே இத்தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக என்பது சராசரி அரசியல் கட்சியல்ல மாறாக பிற்போக்குத் தனமான பாசிச, பயங்கரவாத சங்பரிவாரின் அரசியல் பிரிவு எனவும் பாஜக மீது காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் திருமா.