தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதன் பிறகு இவர் இயக்கிய “வை ராஜா வை” திரைப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த தோல்விக்கு பிறகு படங்களை இயக்காமல் இருந்து வந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

ஐஸ்வர்யா திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் செலுத்தியது தான் அவருக்கும் தனுஷுக்கும் இடையே பிரிவுக்கு காரணம் என பேசப்பட்டது. இந்நிலையில், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தற்போது முழுமூச்சாக இயக்கத்தில் இறங்கியுள்ளார் ஐஸ்வர்யா. இந்தியில் முஸாபிர் என்றும் தமிழில் பயணி என்றும் ஆல்பம் சாங்கை இயக்கிக்கொண்டு உள்ளார்.

3 படத்தில் கொலவெறி பாடலின் மூலம் அறிமுகமான அனிருத் இந்த ஆல்பத்திற்கு இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆல்பத்தை பெண்கள் தினத்தன்று டீசராக ட்விட்டரில் வெளியிட்டிருந்தார் ஐஸ்வர்யா. இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் இருந்தது. தனுஷுடன் விவாகரத்து ஆன நிலையிலும் தொய்வடைந்துவிடாமல் ஐஸ்வர்யா இயங்குவதை வரவேற்கின்றனர் அவரது ரசிகர்கள்.

