ரஷ்யா சில வாரங்களுக்கு முன்பு வெளிப்படையாக உக்ரைன்மீது தனது போர் நடவடிக்கையை தொடங்கியது. போர் நடவடிக்கையை நிறுத்தச்சொல்லி பல உலக நாடுகள் ரஷ்யாவை கண்டித்தும், உக்ரைனுக்கு ஆதரவு கொடுத்தும் வந்தனர். எதையும் கண்டுகொள்ளாத ரஷ்யா தனது நடவடிக்கையை தீவிரப்படுத்த பலவிதமான தாக்குதல் முறையை முன்னெடுத்தது. அதிலொரு தாக்குதல் முறைதான் vaccum bomb வெடிக்கச்செய்தல்.
இந்த வகையான குண்டுகள் போடப்பட்டவுடன் அது சுற்றுப்புறத்தில் இருக்கும் ஆக்சிஜனை பயன்படுத்தி வெடித்து நீண்ட தூரம்வரை நெருப்பை பரப்பும். இதன் மூலமாக பரவும் வெப்பம் அதிக ஆபத்துக்கொண்டது. பல உயிர்களை கொன்றுகுவிக்கும் சக்திவாய்ந்தது.
இந்த vaccum bomb வெடிக்க வைக்கப்பட்டவுடம் கார்பன் வெடிமருந்து பரவி சுற்றிலும் கருமேகம் போன்று தோற்றத்தை உருவாக்கும்.குறிப்பிட்ட தூரம்வரையுள்ள ஆக்சிஜனை உறிஞ்சி அதை நெருப்பாக குமிழும். சாதாரண குண்டுகள் ஏற்படுத்தும் பாதிப்பைவிட இது ஏற்படுத்தும் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
vaccum குண்டுகளை ரஷ்யா போரில் பயன்படுத்தி வருகிறது என்று உலக நாடுகள் குற்றம் சாட்டின. இதுவரை அதை பற்றி எந்த செய்திகளையும் வெளியிடாது இருந்த ரஷ்யா இப்போது அதை ஒப்புக்கொண்டுள்ளது.
Tos -1A எனப்படும் வேக்கம் குண்டுகளை பயன்படுத்தியதாக ரஷ்ய நாட்டு பாதுகாப்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதே குண்டுகளை ரஷ்யா சிரியா, ஆப்கானிஸ்தான் நாடுகளின்மீது இதற்கு முன்பே பயன்படுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.