அரசியல்இந்தியாஉலகம்சமூகம்

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பா?!.. கண்காணிக்கும் அமெரிக்கா!

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பதை அமெரிக்கா கண்காணித்துக் கொண்டிருக்கிறது! – ஆண்டனி பிளிங்கன் (அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர்)

இல்ஹான் ஓமர் கேள்வி

மனித உரிமைகள் தொடர்பாக நரேந்திர மோடியின் அரசாங்கத்தை விமர்சிக்க அமெரிக்க அரசாங்கம் தயக்கம் காட்டுவதாக சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கப் பிரதிநிதி இல்ஹான் ஓமர் கருத்து தெரிவித்தார்.

மேலும், ‘பல இந்திய மாநிலங்கள் மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளன. அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட நம்பிக்கை சுதந்திர உரிமைக்கு சவால் விடும் வகையில் பல சர்ச்சைகள் தீர்ப்புகள் இந்தியாவில் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்தியாவில் உள்ள முஸ்லீம் மக்களை தன் பங்காளிகள் என கூறும் மோடி அதே முஸ்லீம் மக்களுக்கு என்ன செய்து விட்டார் என்று எண்ணி பார்க்க வேண்டும்’ என ஜனாதிபதி ஜோ பிடனின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இல்ஹான் ஓமர் கடந்த வாரம் கேள்வி எழுப்பினார்.

ஆண்டனி பிளிங்கன் கருத்து

திங்களன்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர்,  மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் பேசியபோது,

‘இந்தியாவில் சில அதிகாரிகளால் “மனித உரிமை மீறல்கள்” அதிகரிப்பதாக விவரித்து இது குறித்து கண்டனம் தெரிவித்த அவர் “பகிரப்பட்ட மதிப்புகள் (மனித உரிமைகள்) குறித்து நாங்கள் எங்கள் இந்தியப் பங்காளிகளுடன் புரிதலில் உள்ளோம், மேலும் இந்தியாவில் உள்ள சில ஆட்சியாளர்கள், காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகளால் மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம்’ என்று அமெரிக்கப் பிரதிநிதி இல்ஹான் ஓமர் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக இதனை ஆண்டனி பிளிங்கன் கூறினார்.

இதுபற்றி வேறெதுவும் பெரிதாக ஆண்டனி பிளிங்கன் விவரிக்கவில்லை. அவரை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்ர் ஆகியோர் இந்தியாவில் நடக்கும் மனித உரிமைகள் பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

 

 

Related posts