பாகிஸ்தானில், இம்ரான் கான் ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் சில நாட்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. எதிர் கட்சிகளும் கூட்டணி கட்சிகளும் இம்ரான் கானுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டார்.
இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் தலைவர் ஷேபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி. இவருக்கு வயது 70 ஆகும்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 3 திருமணங்கள் செய்திருந்த நிலையில் ஷேபாஸ் ஷெரீப் 5 திருமணங்கள் செய்துள்ளார். இதனால், ஷேபாஸ் ஷெரீப்பின் திருமண வாழ்கை குறித்து பலரும் விமர்சிக்க தொடக்கியுள்ளனர்.
ஷேபாஸ் ஷெரீப் திருமணங்களின் பின்னணியில் பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடந்துள்ளது. பஞ்சாப் மாகாண ஆட்சியின்போது தனது காதல் மனைவி அலியா ஹனியின் வீட்டுக்கு வேகமாக செல்லும் வகையில் தனியாக பாலம் அமைத்து, அதற்கு ஹனி பாலம் என பெயர் சூட்டினார்.
சில காலங்களுக்கு பிறகு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அலியா ஹனி சவுதி அரேபியாவில் இருந்த நிலையில் ஷேபாஸ் ஷெரீப் அவரை விவாகரத்து செய்தார். அதன்பிறகு அலியா ஹனி மர்மமான முறையில் இறந்தார். ஷேபாஸ் ஷெரீப் மொத்தம் 5 பேரை திருமணம் செய்திருந்தாலும், முதல் மனைவியான பேகம் நுஸ்ரத் ஷாபாஸ், நான்காம் மனைவி தெஹ்மினா ஆகியோர் மட்டுமே அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இப்படி, சிக்கலான திருமண வாழ்க்கையை மேற்கொண்டுள்ள ஷேபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளது பாகிஸ்தான் மக்களிடம் அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது.