மண்ணின் மைந்தருக்கு வாழ்த்துகள்!
அனைவரின் பேராதரவுடன் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று 15வது குடியரசுத் துணைத் தலைவராக விரைவில் பதவியேற்று மாநிலங்களவையை வழிநடத்த இருக்கும் அண்ணன் திரு. C.P.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு தேசத்தை வழிநடத்தும் முக்கியப் பொறுப்பைத் தமிழ் மண்ணின் மைந்தர் ஒருவர் அலங்கரிக்க இருப்பது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த அரும் வாய்ப்பை நல்கி தமிழ் மண்ணிற்குப் பெருமை சேர்த்த நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும், நமது பாஜக தேசியத் தலைவர் திரு. ஜே.பி. நட்டா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

