புல் ஷாட் மன்னன் :
ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் புல் ஷாட்டுக்கு பெயர்போனவர் இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் ஷர்மா. அவர் கிரீஸில் நிற்கும் போது ஷாட்டாக வீசப்படும் பந்துகளை தனித்துவமான புல் ஷாட் மூலம் எளிதாக எதிர்கொள்வதோடு அதை சிக்ஸர்க்கும் விலாசக்கூடியவர் ரோகித்.
எமனான பேவரேட் ஷாட் :
டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பேவரைட் ஷாட்டே அவருக்கு எமனாக அமைந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சிக்ஸர் அடிப்பதை விட நிலைத்து நின்று விளையாடுவது முக்கியம். அதுபோல டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷாட் பால்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. திட்டமிட்டு எதிரணி பௌலர்கள் தொடர்ந்து ஷாட் பந்தாக வீச ஓரிரு சிக்ஸர்கள் அடித்தாலும் பின்பு அவுட்டாகி நடையை கட்டிவிடுகிறார் ரோஹித் ஷர்மா. இது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துவிடுகிறது. தற்போது இந்திய அணி விளையாடிக்கொண்டிருக்கும் டெஸ்ட் போட்டிகளிலும் இது தொடர்கிறது.
சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை :
இந்த நிலையில், ரோஹித் புல் ஷாட் விளையாடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர், டெஸ்ட் கிரிக்கெட்டில் புல் ஷாட் விளையாடுவது குறித்து ரோஹித் யோசிக்க வேண்டும் எனவும், ஒரு இன்னிங்சில் 70,80 ரன்கள் எடுக்கும் வரை அவர் புள் ஷாட்டை தவிர்ப்பது நல்லது. எதிரணி பௌலர்கள் இவருக்கு ஷாட் பந்துகளை வீசுவதையே ஆயுதமாக பயன்படுத்தி எளிதில் விக்கெட் எடுத்துவிடுகின்றனர் என ரோஹித்துக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.