விளையாட்டு

ஐபிஎல் 2022 ; புதிய பொறுப்பில் களமிறங்குகிறார் லசித் மலிங்கா!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய வேகப் பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் லசித் மலிங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டின் 15 வது  போட்டித் தொடர், வரும் 26 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இதற்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றது.

இந்த சீசனில் புதிதாக 2 அணிகள் ஏலத்தில் பங்கேற்றனர். ஏலத்தில் அனைத்து அணிகளும் தன் அணியை கட்டமைக்கும் பொருட்டு இளம் வீரர்களை ஏலத்தில் எடுக்க முன் வந்திருந்தனர். ராஜஸ்தான் அணி நிர்வாகம் முன்னனி சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், சஹால் ஆகியோரை அணியில் எடுத்தது. இந்த அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளராக ஷேன் வார்னே இருந்து வந்தார்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பந்துவீச்சு பயிற்சியாளருமான சேன் வார்ன் மாரடைப்பால் மார்ச் 4ல் மாரடைப்பால் காலமானார். இந்த சோகச்செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் ஐபிஎல் அணியின் நிர்வாகம் தங்களது அணியின் புதிய வேகப் பந்துவீச்சு பயிற்சியாளராக மும்பை அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் லசித் மலிங்காவை தேர்வு செய்துள்ளது.

இவர் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts