குதிரைவால் திரைப்படம் ஒரு கற்பனை கதையை கருவாக கொண்டு உருவானதாகும் . குதிரைவால் என்ற தலைப்பு கேட்போருக்கு வித்தியாசமான உணர்வை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. இத்திரைப்படத்திற்கு ஜி.ராஜேஷ் என்பவர் கதை எழுதியுள்ளார். இத்திரைப்படத்தை மனோஜ் லியோனஸ் ஜாக்சன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். இப்படத்தில் மெட்ராஸ் படத்தின் அன்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்த கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
அஞ்சலி பாட்டீல், சௌமியா ஜெகன்மூர்த்தி, ஆனந்த் சாமி, சேத்தன் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பிரதீப் குமார் இசையில் உருவான இப்படத்தை அட்டக்கத்தி, பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படத்தை இயக்கிய பா. ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரோடக்க்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
ஏற்கெனவே, இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது. பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிட தேர்வானது. இந்த நிலையில், குதிரைவால் வரும் மார்ச் 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.