சினிமா

நாளை வெளியாகிறது மாறன் ; இன்வெஸ்டிகேட் ஜர்னலிஸ்ட்டாக களமிறங்கும் தனுஷ்!

வித்தியாசமான திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் தனுஷின் புதிய வரவாக மாறன் திரைப்படம் மார்ச் 11 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.பெரிய நடிகர்களின் படங்கள் தொடர்ந்து அதிகாலையில் வெளியிடப்பட்டுவரும் நிலையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் மாறன் திரைப்படத்தை புதிய முயற்சியாக, மக்களிடம் உடனடியாக கொண்டுசேர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக மாலை 5 மணிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

நடிகர் தனுஷ் முதல் முறையாக, இன்வெஸ்டிகேட் ஜர்னலிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது அவரது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த படத்தில் தனுஷ் இரண்டு பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் இயக்குனராக அறியப்பட்ட ,தனது மேக்கிங்கிற்கு தனித்துவமான அடையாளத்தை பெற்றுள்ள கார்த்திக் நரேன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஊழல் அரசியல்வாதியாக இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி நடித்துள்ளது இப்படத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.கதாநாயகியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். விவேகானந்த சந்தோசம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் மாறன் படத்தை தயாரித்துள்ளது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் இந்த புதிய முயற்சி வெற்றிபெறுமா? கார்த்திக் நரேன்- தனுஷ் கூட்டணி சோபிக்குமா ? என்ற மிகுந்த எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டிருக்கும் நிலையில் நாளை வெளியாகும் மாறன் திரைப்படமே பதிலளிக்கக்கூடும்.

Related posts