சினிமா

இயக்குனர் சசியின் இந்தக்கால காதல் கதை – நூறுகோடி வானவில்!

நூறுகோடி வானவில் திரைப்படம், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகவும், சிட்தி இத்தானி கதாநாகியாகவும் நடித்துள்ளனர். கோவை சரளா மற்றும் தம்பி ராமையா நகைச்சுவை பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். சம்பத், ரினில், விஜே பார்வதி துணை நடிகர்களாக நடித்துள்ளனர்.

பூ படத்திற்காக சிறந்த இயக்குனர் விருதை பெற்ற சசி இப்படத்தை இயக்கியுள்ளார். ஒரு காதல் ஜோடியின் வாழ்க்கையை சதி சுற்றி வளைக்கிறது, அந்த சதியால் சில எதிர்பாராத நிகழ்வுகள் அவர்களது வாழ்க்கையை புரட்டிபோடுகிறது. அந்த நிகழ்வுகளை எப்படி கடக்கிறார்கள் என்பதை மையமாகக்கொண்டு இப்படம் அமைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர் திரையுலக வட்டாரங்கள்.

அருண் அருணாசலத்தின் மாதவ் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது. சித்து குமார் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். படத்தின் சிங்கிள் ட்ராக்கான “கண்ணாட்டி” பாடல் நாளை வெளியாகிறது. விரைவில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts