சினிமாவெள்ளித்திரை

ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த பிரபல இசையமைப்பாளர்!

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.

பிரபல இசையமைப்பாளர்

இவர் அடுத்ததாக இயக்கி, நடித்துள்ள திரைப்படம் ‘லவ் டுடே’. இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

டவிட்டர் பதிவு 

இதனிடையே ‘லவ் டுடே’ படத்தின் மூன்றாவது பாடலான ‘பச்சை இலை’ என்ற பாடல் அண்மையில் வெளியாகி வைரலாகி வருகிறது. எனினும் இந்த பாடல் போதைப் பொருட்களை ஊக்குவிப்பது போல் உள்ளதாக சர்ச்சைகளும் கிளம்பியது. இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘போதைப்பொருட்களில் இருந்து விலகி இருங்கள்’ எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Related posts