சினிமாவிளையாட்டு

பிரபல இசையமைப்பாளருடன் சச்சின் டெண்டுல்கர் சந்திப்பு!

இந்திய திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர். ரகுமான்.

திடீர் சந்திப்பு

இவர் இசையில் அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன் -1’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்குமேல் வசூல் செய்து வருகிறது. இதனைத்த்தொடர்ந்து சிம்பு நடித்து வரும் ‘பத்து தல’, சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ ஆகிய படங்களுக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் சந்தித்துள்ளார். இந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கங்களில் இருவரும் வெளியிட்டுள்ளனர்.

Related posts