சினிமாவெள்ளித்திரை

வெளியானது பிரியாமணி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

ஃபர்ஸ்ட் லுக்

2007-ம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக கவனம் ஈர்த்தவர் நடிகை பிரியாமணி. இந்த படத்திற்காக அவர் தேசிய விருதும் பெற்றார். அதனைத்தொடர்ந்து நினைத்தாலே இனிக்கும், ராவணன் போன்ற படங்களின் மூலம் பிரபலமானார். பின்னர் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது இவர் இயக்குனர் ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டி.ஆர்.56’ என்ற படத்தில் நடித்துள்ளார். பிரவீன், தீபக் ராஜ் ஷெட்டி, ரமேஷ் பட், யத்திராஜ், வீணா பொண்னப்பா, மஞ்சுநாத் ஹெக்டே, சுவாதி ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘டி.ஆர்.56’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related posts