விஜய்-67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கும் பிரபல நடிகை.
பிரபல நடிகை
நடிகர் விஜய் தற்போது வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகிவரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில், தற்போது ‘தளபதி-67’ படத்தில் தான் விஜய்யுடன், த்ரிஷா நடிக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே வெளியான கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி ஆகிய படங்களில் நடிகர் விஜய், த்ரிஷா ஜோடி பேசப்பட்ட நிலையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஜோடி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

