இன்டர்நேஷனல் செஸ் கிராண்ட் மாஸ்டர் சென்னையில் 2022 ஒலிம்பியாட் தொடருக்காக தமிழக அரசு சார்ப்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கண்டு வியந்து பாராட்டி உள்ளார்.
இன்டர்நேஷனல் செஸ் ஒலிம்பியாட் போட்டி
தமிழ்நாட்டில் நாளை 44-வது இன்டர்நேஷனல் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க உள்ளது. இப்போட்டி தொடர்கள் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட் நட்சத்திர விடுதியில் நாளை காலை 10 மணிக்கு தொடங்க உள்ளன. இப்போட்டிகள் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சென்னையில் அலங்காரங்கள்
இன்டர்நேஷனல் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க 187 நாடுகளிலிருந்து 2500ம் மேற்பட்ட வீரர்கள் தமிழகம் வருகை தருகின்றனர். அவர்களை கவரும் வண்ணம் சென்னை முழுவதும் இன்டர்நேஷனல் செஸ் ஒலிம்பியாட் போட்டிகான அலங்காரங்கள் செய்யப்பட உள்ளது.

நேப்பியர் பாலத்தில் செஸ் போர்டு தீமில் வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளது. சென்னை மெரினா, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் என பல இடங்களில் செஸ் ஒலிம்பியாட் தொடரின் லோகோவான ‘தம்பி’ குதிரை பொம்மை வைக்கப்பட்டு உள்ளது.
செஸ் வீரர் ட்வீட்
ஸ்பானிஷ் நாட்டை சேர்ந்தவர் செஸ் வீரர் வெல்லேஜு போன்ஸ். இவர் 16 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர். இதுவரை 5 முறை ஸ்பானிஷ் நாட்டில் செஸ் சாம்பியஷிப் பட்டத்தை வென்றவர்.

இவர் கடந்த 2000ம் ஆண்டு நடந்த இன்டெர்நேஷனல் அண்டர் 18 உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் தான் சாம்பியன்ஷிப் வென்றார். இந்நிலையில், சென்னைக்கு வருகை தந்த வெல்லேஜு போன்ஸ் ஒரு பரபரப்பு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் தமிழக அரசின் ஏற்பாடுகளை வெகுவாக பாராட்டி உள்ளார்.
Just arrived to the hotel in Chennai. It’s 5am. Probably i will find something to complain about haha, but so far , everything is just absolutely amazing. Incredibly warm welcome by all the volunteers and staff, fast immigration lines just for the Olympiad , the fastest hotel 👇
— GMVallejo (@Chessidharta) July 26, 2022
அந்த ட்வீட்டில், ‘சென்னைக்கு இன்று காலை 5 மணிக்கு சென்னை வந்தேன். எதையாவது பற்றி புகார் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் நான் இதுவரை புகார் சொல்லும் விதமாக எதையும் பார்க்கவில்லை. எல்லாமே மிக சிறப்பாக உள்ளது. நிர்வாகிகள் ஏற்பாட்டாளர்கள் மிக சிறப்பான வரவேற்பை எனக்கு கொடுத்தனர்.
நான் எதையாவது பற்றி புகார் செய்யலாம், ஏதாவது குறை கண்டுபிடிக்கலாம் என்று இருத்தேன். ஆனால் இதுவரை எந்த குறையையும் என்னால் கூற முடியவில்லை. எல்லாமே எனக்கு முற்றிலும் ஆச்சரியமாக இருக்கிறது. அனைத்து தன்னார்வலர்கள் மற்றும் ஊழியர்கள் அன்பான வரவேற்பு கொடுத்தனர்.
ஒலிம்பியாட் வீரர்களுக்காகவே என்று தனியாக இமிக்ரேஷன் ஏற்பாடுகள் உள்ளன. எனக்கு உடனே ஹோட்டல் அறை அளித்தனர். இதுவரை இவ்வளவு வேகமாக ஹோட்டல் அறை எனக்கு கிடைத்ததில்லை’ என்று தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.

