Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»டி20 உலகக் கோப்பை 2025: வெற்றி பெற்றும் வெளியேறிய பாகிஸ்தான்; அரையிறுதிக்குள் நுழைந்தது நியூசிலாந்து

டி20 உலகக் கோப்பை 2025: வெற்றி பெற்றும் வெளியேறிய பாகிஸ்தான்; அரையிறுதிக்குள் நுழைந்தது நியூசிலாந்து

March 1, 20262 Mins Read24 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது.

இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டம் பல்லகலேவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஜமான் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் தொடக்கம் முதலே பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டனர்.

இதன் மூலம் இருவரும் அரைசதம் கடந்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 176 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக பார்ட்னர்ஷிப்பை உருவாக்கிய ஜோடி என்ற சாதனையையும் இவர்கள் படைத்தனர். அதன்பின் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஃபகர் ஜமான் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 84 ரன்களை சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார்.

அதேசமயம் மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த சாஹிப்சாதா ஃபர்ஹான் நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே சீசனில் இரண்டு சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்த அவர், டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை அவர் சமன் செய்து அசத்தினார்.

இதையும் படிக்க :  "தல ஃபார் ரீசன்"- பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக் நெகிழ்ச்சி

பின்னர் 9 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 100 ரன்களில் ஃபர்ஹான் இக்கெட்டை இழக்க, மேற்கொண்டு களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் தில்ஷன் மதுஷங்கா 3 விக்கெட்டுகளையும், தசுன் ஷனகா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா 3 ரன்களில் விக்கெட்டை இழக்க, கமில் மிஷாரா 26 ரன்களுக்கும், சரித் அசலங்கா 25 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய பவன் ரத்னாயக அதிரடியாக விளையாடி அரைசதத்தை பதிவு செய்ய, மறுமுனையில் விளையாடிய கமிந்து மெண்டிஸ் மற்றும் ஜனித் லியானகே ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இதையும் படிக்க :  சஞ்சு சாம்சனை ஆதரிக்க காரணம் என்ன? மௌனம் கலைத்த கௌதம் கம்பீர்

அவருடன் இணைந்த கேப்டன் தசுன் ஷனகாவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது. இதில் பவன் ரத்நாயக 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 58 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் தசுன் ஷன்கா 24 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். மேற்கொண்டு இறுதிவரை போராடிய தசுன் ஷனகா 2 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 76 ரன்களை செர்த்தார்.

இதன் காரணமாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும், நிகர ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது. அதேசமயம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபூந்தமல்லி, வடபழனி இடையே விரைவில் மெட்ரோ ரயில் – ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி
Next Article தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,800 உயர்வு: வெள்ளி விலையும் ஏற்றம் கண்டது

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,464 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,464 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.