மும்பை: சமூகவலைதளம் மூலம் பழகி சிறுவனை காதலிப்பதாய் சொல்லி ஏமாற்றிய இளம்பெண். காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சமூகவலைதளம்
பீகாரைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு சமூகவலைதளம் மூலம் 20 வயது பெண் அறிமுகமாகிருக்கிறார். மும்பையில் உள்ள தாராவி பகுதியை சேர்ந்த அந்த இளம் பெண் சமூகவலைதளத்தில் பலருடன் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், அந்த 17 வயது சிறுவனும், இளம் பெண்ணும் கடந்த 2020ம் ஆண்டு முதல் ஆன்லைனில் பேசிக்கொள்ள தொடங்கியுள்ளார்கள். பின்னர் ஒரு நாள் அந்த பெண் அவரை காதலிப்பதாக கூறியிருக்கிறார். அதை ஏற்கமறுத்த அந்த சிறுவன் அந்த பெண்ணை சமூகவலைதளத்தில் பிளாக் செய்திருக்கிறார்.
இளம் பெண்னின் சூழ்ச்சி
இதனையடுத்து அந்த இளம்பெண் சமூகவலைதளத்தில் வேறு ஒரு பெயரில் அந்த சிறுவனிடம் பேச ஆரம்பித்திருக்கிறார். சூழ்ச்சி தெரியாத இந்த சிறுவனும் அந்த பெண்னிடம் இயல்பாக பேச தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் அந்த சிறுவன் கடந்த ஜனவரி மாதம் வேலைக்காக மும்பை வந்திருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தை அந்த பெண் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள் நினைத்துள்ளார்.
எனவே சிறுவனை ஏமாற்றி தன் வீட்டுக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும், இந்த விஷயத்தை வெளியே சொன்னால் உன் மீது காவல்துறையில் புகாரளிப்பேன் என்று அந்த சிறுவனை மிரட்டிருக்கிறார் அந்த இளம்பெண்.
எச்சரிக்கை
சிறுவன் இதுகுறித்து தன் பெற்றோரிடம் கூறியுள்ளான் உடனே அவன் தந்தை மும்பையில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று இனி இதுபோல் நடந்துக்கொள்ளக் கூடாது என்று எச்சரித்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த இளம்பெண் கடந்த மாதம் சிறுவன் மீதும் அவர் பெற்றோர் மீதும் காவல்துறையில் புகாரளித்தார்.
புகார்
இதனையடுத்து பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற பிரிவுகளில் போலீசார் அந்த சிறுவனின் மீதும் அவர் பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அந்த சிறுவனின் குடும்பத்தினர் உடனடியாக ஜாமீன் பெற்றனர்.
அதையடுத்து சிறுவனின் தந்தை அந்த பெண் மீது தாராவி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதைதொடர்ந்து போலீசார் விசரசரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றைய நவீன அறிவியல் வளர்ச்சியின் உச்சம் என்று கூறப்படும் சமூகவலைதளத்தில் தொடர்ந்து இது போன்ற ஏமாற்று வேலைகள் நடைபெற்று வருவதை பலரும் கண்டித்து வருகிறார்கள்.