இலங்கையில் கடந்த 2 மணி நேர நிலவரப்படி மீண்டும் பெட்ரோல் டீசல் விநியோகம் தொடங்கியுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு
இலங்கை கடந்த சில மாதங்களாக பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மலையென உயர்ந்தது. 1 கப் டீ ரூ100, ஒரு கிலோ அரிசி ரூ.450, 1 லிட்டர் பால் ரூ.75, கேஸ் சிலிண்டர் ரூ.5000, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.254, ஒரு லிட்டர் டீசல் ரூ.180, ஒரு கிலோ சிக்கன் ரூ.1000, ஒரு கிலோ தேங்காய் எண்ணெய் ரூ.900 என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளன.
மக்கள் போராட்டம்
நிலை குலைந்த இலங்கை பொருளாதாரத்தால் மக்கள் இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து போராட தொடங்கினர். மேலும், மகிந்த ராஜபக்சே மற்றும் கோத்தபய ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என மக்கள் கண்டன போராட்டம் நடத்தினர்.
வெடித்த வன்முறை
அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்கள் மீது ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் இலங்கையில் பெரும் வன்முறை வெடித்தது. ஆளுங்கட்சி எம் பி கள் வீடுகள் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டன. ராஜபக்சேவின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
மீண்டும் பெட்ரோல் டீசல் விநியோகம்
போராட்டக்களத்தில் தீ எரிப்பு பல்வேறு பகுதிகளில் காணப்பட்டதாலும், கலவர சூழலால் பெட்ரோல் டீசல் டேங்க்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் கடந்த திங்கட்கிழமை முதல் இலங்கையில் பெட்ரோல் டீசல் விநியோகம் நிறுத்தப்பட்டு இருந்தது.
தற்போது மதியம் 2 மணியிலிருந்து மீண்டும் இலங்கையில் பெட்ரோல் டீசல் விநியோகம் தொடங்கப்பட்டு இருக்கிறது.