அரசியல்இந்தியா

முஸ்லிம்களை எரிக்க வேண்டும் – பாஜக எம்எல்ஏ ஹரிபூசன் தாக்கூரின் சர்ச்சை கருத்து!

‘இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பறித்து இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட வேண்டும்’ என்று பாஜக எம்.எல்.ஏ. ஹரி பூசன் தாக்கூர் கூறியுள்ளார்.

பாஜக எம். எல். ஏ ஹரிபூசன் தாக்கூர்

பீகார் மாநிலம், பாட்னாவில் தசரா பண்டிகை ஒன்றில் பாஜக எம் எல் ஏ ஹரிபூசன் தாக்கூர் கலந்துகொண்டார். அப்போது அவர், ‘நாமும் நம் மக்களும் வலுவாக இருக்க நமக்கு ஒரு அனுமன் தேவை. ராவணனின் இலங்கையை அனுமன் எரித்தது போல், இந்தியாவில் சுற்றி திரியும் முஸ்லிம் அரக்கர்களை எரிக்கப்பட வேண்டும்’ என்று அவர் முஸ்லிம்கள் குறித்து கருத்தை கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா

ஜெ.பி. நட்டா கேரளா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ளார். அங்கு நடைபெற்ற கட்சி கூட்டம் ஒன்றில், ‘இடதுசாரி கட்சி என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத மூட நம்பிக்கையான விஷயத்தை பேசக்கூடியவர்கள்’.  குறிப்பிட்ட சில சமூக மக்களை மட்டும் வாழ வைத்து வருகிறது. கேரளா அரசு என்பது முஸ்லிம் தீவிரவாதிகளை வளர்த்து அரசியல் செய்யும் இடதுசாரி அரசு ஆகும். கடந்த 15 ஆண்டாக கேரளா மாநிலத்தில் அரசியல் ரீதியான கொலைகள் அதிகமாக நடந்து வருகிறது. அதுவும் கடந்த மூன்று வருடங்களில் சுமார் 1000திற்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது. முக்கியமாக முதல்வர் மாவட்டமான குன்னுரில் சுமார் 12 கொலைகள் நடந்தது’ என்று ஜெ.பி. நட்டா கூறினார்.

சாலைகள் பெயர்கள் மாற்றம்

டெல்லியில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் முகலாய மன்னர் பெயரில் உள்ளது. துக்ளக், பாபர், ஷாஜகான் போன்ற பெயரை மாற்ற வேண்டும் என்று டெல்லி பாஜக தலைவர்கள் சிலர் அம்மாநில முதல்வர் கேஜ்ரிவாலுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.


ஒரு பகுதி மக்கள் பேசி வருகின்ற இந்தி மொழியை இந்தி பேச மற்ற மாநிலங்களுக்கும் இணைப்பு மொழியாகவும், பள்ளிகளில் கட்டாய மொழியாகவும், ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற புதிய வடிவில் சமீபகாலமாக இந்தியை திணித்து வருகிறது.

பாஜக தனது அரசியல் தேவைக்கு நாட்டின் உள்ள மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்தி பேசி வருகிறார்கள் என பொதுமக்கள் இடையே பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக என்பது இந்தியவில் உள்ள அனைத்து மக்களுக்குமான கட்சி என்று கூறியுள்ளார்.

 

Related posts