சினிமாவெள்ளித்திரை

குற்றப்பரம்பரை – பாரதிராஜா, பாலாவை தொடர்ந்து போட்டியில் களமிறங்கும் சசிகுமார்

குற்றப்பரம்பரை கதையை படமாக எடுக்க தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குனர்களும் போட்டிபோட்டு கொண்டனர். இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் இதை வெப்சீரிஸாக எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர்கள் போட்டி

பிரபல இயக்குனர்களான பாரதிராஜா, பாலா ஆகியோர் குற்றப்பரம்பரை கதையை படமாக எடுக்கப் போவதாக கூறினார்கள். இதனிடையே பாரதிராஜாக்கும் பாலாவிற்கும் இடையே யார் குற்றப்பரம்பரை கதையை படமாக்க போவது என்ற போட்டி நிலவியது. இயக்குநர் பாலா ‘குற்றப்பரம்பரை ஒரு வரலாற்று பதிவு. அதனை யார் வேண்டுமானாலும் படமாக்கலாம்’ என்று கூறியது சர்ச்சையானது. இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா இயக்க இருந்த குற்றப்பரம்பரை வெப் சீரிஸ் பூஜை வரை சென்றது.

இயக்குனர் பாண்டிராஜ்

ஆனால் பாரதிராஜா படங்களை இயக்குவதை நிறுத்திவிட்டு பிறர் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். பாலாவும் மற்ற படங்களை இயக்க தொடங்கி விட்டார். இதனிடையே இயக்குனர் பாண்டியராஜியும் குற்றப்பரம்பரை கதையை படமாக எடுக்கப்போவதாக தகவல் வெளியானது. இவர் இயக்கிய ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் இந்த நாவலை சூர்யா படிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

மீண்டும் குற்றப்பரம்பரை

இதனையடுத்து தற்போது இயக்குனர் சசிகுமார் இந்த குற்றப்பரம்பரை கதையை வெப்சீரிஸாக எடுக்கப்போவதாக கூறப்படுகிறது. பிரபல ஓ.டி.டி நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்து ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்க போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இதற்கான வசனங்களை எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி எழுதவுள்ளார். இவர்தான் குற்றப்பரம்பரை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகுமாரின் படங்கள்

தற்போது பகைவனுக்கு அருள்வாய், காமன் மேன், காரி போன்ற படங்களின் நடித்து வருகிறார் சசிகுமார். இந்த படங்களின் பணிகளை முடித்து விட்டு. குற்றப்பரம்பரை கதையை வெப்சீரிஸாக எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுப்ரமணியபுரம், ஈசன் படங்களுக்கு பிறகு சசிகுமார் இயக்க போகும் படம் என்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts