சினிமாவெள்ளித்திரை

‘ஓ2’ படம் நயன்தாராவின் பலமா ? பாரமா ? – O2 Movie Review!

நடிகை நயன்தாரா நடிப்பில் கடைசியாக வந்த நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் கலவையான விமர்சனகளை பெற்றது. இதனால் நயன்தாராவின் ரசிகர்கள் அவரின் அடுத்த படத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

நயன்தாராவின் படம்

இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ‘ஓ2’. இத்திரைப்படம் நேற்று நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தை இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணியாற்றிய ஜி.கே.விக்னேஷ் இயக்கியுள்ளார். காற்றின் முக்கியத்துவத்தை பேசும் இந்த படம் ஒரு முழு நீள திரில்லராக உருவாகியுள்ளது. நுரையீரல் பாதிக்கப்பட்ட தன் மகனின் உயிரைக் காப்பாற்றத் துடிக்கும் ஒரு தாயின் போராட்டம் தான் இந்த ஓ2.

நயன்தாரா

படம் எப்படி இருக்கிறது

முழு கதையும் ஒரு பேருந்தில் நடப்பது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சிறிய இடத்தை மிக நேர்த்தியாக படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் தமிழ். அதிலும் எந்த ஒரு காட்சியும் தொய்வு ஏற்படாமல் விறுவிறுப்பாக நகர்கிறது. விஷால் சந்திரசேகரின் இசை காட்சியை மேலும் பதற்றமாக்க உதவியிருக்கிறது. இவர்களுடன் ஒட்டுமொத்த படத்தையும் தனது நடிப்பால் தாங்கி பிடிக்கிறார் நயன்தாரா. மகனுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் துணிவு, பயம், பதற்றம், குற்ற உணர்ச்சி, பாசம், பதற்றம் என்று அத்தனை உணர்ச்சிகளையும் எதார்த்தமாக தனது முகத்தில் கொண்டு வருகிறார்.

 O2 Movie Review

பலமா? பாரமா?

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆடுகளம் முருகதாஸ், சிறுவன் ரித்விக், இயக்குனர் பரத் நீலகண்டன், மறைந்த நடிகர் ஆர்.என்.ஆர் மனோகர் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். படத்தின் இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்றவை காட்சிகளை பதற்றமாக்க உதவினாலும் காட்சிகள் அழுத்தமாக இல்லை. இதனால் ஆக்சிஜனுக்காக ஒருவரை ஒருவர் தாக்க முற்படும் காட்சிகள் பார்வையாளர்கள் மத்தியில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இதனால் நயன்தாராவிற்கு பலமாக அமைந்திருக்க வேண்டிய படம் பாரமாகிவிட்டது.

Related posts