இந்தியாசினிமா

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல ஹிந்தி நடிகர்!

ஹிந்தி நடிகர்

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். சுஷானே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் கடந்த 2014-ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். பின்னர் ஹிருத்திக் ரோஷன், பாடகி ஷபா ஆசாத் என்பவரை காதலிக்க தொடங்கினார். இதனைத்தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளில் இருவரும் சேர்ந்தே பங்கேற்றனர்.

வதந்தி

இதனிடையே ஹிருத்திக் ரோஷனும் ஷபா ஆசாத்தும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாக வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், நடிகர் ஹிருத்திக் ரோஷன் இதனை மறுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Related posts