ரஜினி படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், 2002-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாபா’. இப்படத்திற்கு ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுத, அண்ணாமலை, பாட்ஷா படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். மேலும், இதில் மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடிக்க, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில், ‘பாபா’ திரைப்படம் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டு, புதுப்பொலிவுடன் மீண்டும் திரையரங்கில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வேலும், ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

