கோவாவில் நேற்று தொடங்கியிருக்கும் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சூர்யாவின் திரைப்படம் திரையிடப்படவுள்ளது.
திரைப்பட விழா
தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் சார்பில் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நேற்று தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழாவில் ஹிந்தி நடிகர்கள் அஜய் தேவ்கன், வருண் தவான், கார்த்திக் ஆர்யன், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், இந்த விழாவில் 79 நாடுகளைச் சேர்ந்த 280 திரைப்படங்கள் திரையிடப்படும்.
இந்நிலையில், இந்த விழாவில் த.செ.ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடித்திருந்த ஜெய்பீம் திரைப்படமும், குரங்குபெடல் திரைப்படமும், கிடா என்ற படமும் திரையிடப்படவுள்ளது.

